முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடஒதுக்கீடு குறித்து பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
PMK 2024-06-24

Source: provided

சென்னை : 10.5 சதவீத வன்னியர் இடஒதுக்கீடு பற்றி சட்டப்பேரவை தலைவர் பேச அனுமதிக்காததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சி உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது "10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் வன்னியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வட மாவட்டங்களில் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக வன்னியர்கள் பின்தங்கி இருப்பதே காரணம். எனவே அவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார்.

அதற்கு, இதுதொடர்பான வழக்கில், 'மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்த முடியும்' என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர்களும் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த பிரச்சினையை ஜி.கே மணி பேசும்போது “சாதிவாரி கணக்கெடுப்பூக்கும் மாநில அரசு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சம்பந்தமில்லை. இரண்டும் தனித்தனியான பிரச்சினைகள்” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவரை பேச அனுமதிக்காததால் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே மணி, “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பிரச்சினையை அதிகாரிகளும் அமைச்சர்களும் திசை திருப்பப் பார்க்கின்றனர். நான் அரசை குறை சொல்லவோ வேறு எதற்காகவும் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை. ஆனால் அமைச்சர்கள் இந்த பிரச்சினையை தொடர்ந்து திசை திருப்பும் நோக்கத்தில் பேசுவதுடன், தேர்தல் பற்றியும் கூட்டணி பற்றியும் அரசியல் பற்றியும் தான் எங்கள் மீது குறை கூறுகிறார்கள். தொடர்ந்து 10.5 இட ஒதுக்கீடை அமல்படுத்த வலியுறுத்தி பேச அனுமதிக்காததால் நாங்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்” என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து