Idhayam Matrimony

ஒரு நாள் பயணமாக ரேபரேலி சென்றடைந்தார் ராகுல் காந்தி

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 04 03

லக்னோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு ஒரு நாள் பயணமாக நேற்று சென்றார்.

முன்னதாக, ராகுல் காந்தி சென்ற விமானம் பர்சத்கஞ்ச் விமான நிலையத்திற்கு வர திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் வானிலை காரணமாக அவர் லக்னோவில் தரையிறங்கினார். அங்கிருந்து சாலை வழியாக ரேபரேலியை சென்றடைந்தார்.

ரேபரேலியில் தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராகுல் காந்தியின் 2-வது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, அவர் தனது சகோதிரி பிரியங்கா காந்தி மற்றும் அமேதி தொகுதி எம்.பி. கிஷோரி லார் சர்மா ஆகியோருடன் ரேபரேலி மக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும்  நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதே போல், எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ரேபரேலி சென்ற ராகுல் காந்தி கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்து பேசினார். மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இதனை தொடர்ந்து, கடந்தாண்டு சியாச்சின் தீ விபத்தில் மக்களவை காப்பாற்றும் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அன்சுமான் சிங்கின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார். அதை தொடர்ந்து மாலை ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டு சென்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து