எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீவ், உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடித்தது ஏமாற்றமளிப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். ரஷிய அதிபர் புதினுடன் மோடி நேற்று (ஜூலை 9) பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் இதுகுறித்த முழு விவரம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, “உக்ரைனில் ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளவயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை குறிவைத்து ரஷிய ஏவுகணைத் தாக்கியுள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிபிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது” என்று புதினுடனான மோடியின் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார். கடந்த ஜூன் 14 அன்று இத்தாலியில் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


