முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் சிறப்பு நாணயம்: அரசிதழில் ஆணை பிறப்பித்தது மத்திய அரசு

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : கலைஞர் நூற்றாண்டையொட்டி முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில்  100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.

தமிழக முன்னாள் முதல்வரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நாணயத்தை கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளான கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பமிட்டதாக தகவல் வெளியானது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் தமிழ் வெல்லும் என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் அரசிதழில் வெளியாக உள்ளதாகவும், இதற்கான மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ளது. நாணையத்தின் ஒரு புறம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024 என அச்சிடப்பட்டும். மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து