முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்னர் இடம்பெற மாட்டார்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      விளையாட்டு
Warner 2023-09-10

Source: provided

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டி20 உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றார். சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும், சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம்பெற்றால் விளையாடுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எங்களுடைய புரிதல். ஆஸ்திரேலிய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் கண்டிப்பாக இடம்பெற மாட்டார் என்றார்.

___________________________________________________________________________________

ஆல்ரவுண்டர் குறித்து துபே

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அதன் பிறகு அடுத்த 4 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் தனதாக்கி கொண்டது.  இந்த தொடரில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன், ஷிவம் துபே 12 பந்தில் 26 ரன் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளும் , துபே 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் துபேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு ஆல் ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்படுவது எப்பொழுதும் சிறப்பான ஒன்று. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் தடுமாறும் போது ஒரே ஒரு ஷாட் மூலம் நீங்கள் மீண்டும் திரும்பி வந்துவிடலாம். இங்கு கண்டிஷன் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் மிகவும் அனுபவித்து விளையாடினோம். இங்கு பெரிய பவுண்டரி எல்லைகள் இருக்கிறது. மக்களும் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து