முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      இந்தியா
Karnataka 2024 07 19

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 

கர்நாடகாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சவனூர் தாலுகாவில் உள்ள மடபுரா கிராமத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அந்த கிராமத்தின் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். 

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மடபுரா கிராமத்தில் உள்ள  ஒரு குடிசை வீட்டில் முத்தப்பா ஹரகுனி (35), அவரது மனைவி சுனிதா (30), தாய் யல்லம்மா (70), இரட்டை மகள்கள் ஆகியோர் வசித்து வந்தனர். 

நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது விழுந்தது. 3 பேர் பலியான நிலையில், காயமடைந்த முத்தப்பா, அவரது மனைவி மற்றும் தாயார் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து