எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தைலாபுரம், ராமதாஸ்- அன்புமணி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும், என்று முயற்சி எடுக்கிறேன் என்று பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நேற்று (மே 31) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அது பெரிய செய்தி ஆகிவிட்டது. அதன் தொடர் நிகழ்வுகள் மனதை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பா.ம.க. கட்சியினரும் அதைத்தான் விரும்புகின்றனர். ராமதாஸ்- அன்புமணி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும், என்று முயற்சி எடுக்கிறேன்.
எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களே கூட ராமதாஸ் - அன்புமணி இடையிலான விரிசலுக்கு நான் தான் காரணம் என்ற செய்தியை பதிவிடுகிறார்கள். இதை எப்படி என்னால் தாங்கிக்கொள்ள முடியும். நான் இரண்டு முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போய்விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கக்கூடாது. இந்த இரண்டுதான் என்னுடைய முடிவு என்ற நிலையில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


