முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் ஒப்புதல்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

சென்னை : எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 19) எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் மாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும், வழக்கறிஞர்கள் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் நாற்காலிகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்ததன்பேரில் 20 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும், நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த கோரியும் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே. குமரேஷ்பாபு அமர்வில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து