முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-1 2024 08 03

Source: provided

சென்னை : சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி நேற்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன். வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலைக்குப் புகழ்வணக்கம்.

சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து