முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசு பெறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு -அவினாசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது : அமைச்சர் முத்துசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Muthusamy 2023-07-27

Source: provided

ஈரோடு : தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். 

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவுபடுத்த முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி இந்த திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நிலையங்களுக்கு இடையே உள்ள நிலத்தை பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை. 

நிலங்களை கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் பேசி நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். விவசாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் பெற்றிருந்தால் பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. 1,416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். 

அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து