Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஆளுங்கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      உலகம்
Kamala 2024 08 03

Source: provided

வாஷிங்டன் :  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் நேற்று  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம்அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், தந்தையார் டொனால்டு ஜேஸ்பர் ஹாரிஸ் ஆப்பிரிக்க தேசமான ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டதை தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயதான அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹரிஸ் முன்னிறுத்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆளும் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் 99 சதவிகிதத்தினரின் வாக்குகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகக் கிடைத்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் நாடு முழுவதுமிருந்து ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் சுமார் 4,567 பேர் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்டமாக துணை அதிபர் வேட்பாளர் யார்? என்பதை கமலா ஹாரிஸ் விரைவில் அறிவிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி தேசிய ஒருங்கிணைப்புச் செயலர் ஜேசன் ரே விரைவில் அவரிடம் அங்கீகாரச் சான்றிதழை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்  டிரம்ப்பைவிட கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு சற்றே அதிகரித்திருப்பது, தேர்தலுக்கு முந்தைய சமீபத்திய கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து