முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

57 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் அமன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
8-Ram-54

Source: provided

பாரீஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மாசிடோனியா....

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அமன், வடக்கு மாசிடோனியா வீரர் செஹ்ராவத் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார். தொடக்கத்திலிருந்து ஆக்ரோஷமாக விளையாடிய அமன் ஆதிக்கம் செலுத்தினார். முதல் பாதியில் 5-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார். தொடர்ந்து அவர் ஆதிக்கம் நீடிக்கவே 10-0 என்ற கணக்கில் விளாடிமிர் எகோராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் அமன்.

தொடர்ந்து ஆதிக்கம்... 

இதையடுத்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ஜெலிம்கான் அபகரோவை, இந்திய வீரர் அமன் எதிர்கொண்டார். தனது பலத்தால் தொடகத்திலிருந்தே ஜெலிம்கானை முடக்க முயற்சித்தார் அமன். அதன்படி முதல் பகுதியில் 3-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தார். போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அமன் 12-0 என்ற புள்ளிகள் பெற்று ரஷ்ய வீரரை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து