Idhayam Matrimony

பக்தர்களுக்கு இலவசமாக திருநாமமிடும் திட்டம்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-30

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இடும் திட்டத்தை  தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தொடங்கி வைத்தார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள். கோவில் வளாகத்தில் திருநாமம் இட பக்தர்களிடம் ரூ.10 முதல் 20 வரை வசூல் செய்கிறார்கள். 

ஒரு சில பக்தர்களை அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமமிட்டு அதிக அளவில் பணத்தை பிடுங்குகிறார்கள். இதனை தவிர்க்க ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திருப்பதி மலையில் உள்ள ஏ.டி.சி. பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் நேற்று தொடங்கி வைத்தார். ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நெற்றியில் திருநாமம் செலுத்தி வருகின்றனர். 

இதனால் இனிமேல் ரூ. 10 கட்டணம் செலுத்தி திருநாமமிட வேண்டியது இல்லை. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

 திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு விரைவு திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை மீண்டும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கும் அறைகளுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு எத்தனை அறைகள் உள்ளன. எப்போது அறைகள் கிடைக்கும் என்பதை பற்றி விவரங்களை அறிவிப்புகள் மூலம் வெளியிட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து