முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி: டிரோன் தாக்குதலால் மக்கள் அச்சம்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      இந்தியா
Drone 2023 06 12

இம்பால், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு மே 3-ம் தேதி குகி ஸோ பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக்கலவரம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டாக்காரர்கள் இம்முறை டிரோன்கள், ராக்கெட்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிஷ்ணுபூர், கிழக்கு இம்பால் மாவட்ட மக்கள் விடிய விடிய சிறிய விளக்குகளைகூட அணைத்துவிட்டு அச்சத்தில் உறைந்தனர்.

இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த  வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார்  மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை சுட்டுக்கொன்றனர்.

இந்தக் கொலைக்கு பின்னர், மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்கார்கள் உட்பட நான்கு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.

மணிப்பூர் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், போராட்டக்காரர்கள் குழு ஒன்று கிராமத்துக்குள் புகுந்து அங்கு ஒருவரைக் கொன்ற பின்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இனக்கலவரத்தின் ஒரு பகுதியாக இந்த கொலைகள் நடந்துள்ளன. கொல்லப்பட்டவர்கள் குகி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி ஆகிய இரண்டு தரப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து