எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் நேற்று காலமான நிலையில் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
சீதாராம் யெச்சூரி மறைவு அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. இடதுசாரி இயக்கத்தின் தீவிர வீரரும் இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாகவும் இருந்தவர் சீதாராம் யெச்சூரி என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி மறைவு செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது. பழம்பெரும் அரசியல்வாதியான சீதாராம் யெச்சூரியை நான் நீண்ட காலம் அறிவேன். அவரது மறைவு தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பாகும் என்று மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி எனக்கு நல்ல நண்பராக இருந்தார். நமது நாட்டை ஆழமாக புரிந்து கொண்டவராகவும் தேசத்தின் சிந்தனையை பாதுகாப்பவராகவும் விளங்கினார். அவருடன் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழந்துள்ளேன். சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்த துயரமான தருணத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


