முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழணை, வீராணம் ஏரியிலிருந்து நீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Viranam-Lake 2023-11-21

Source: provided

சென்னை : கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்டத்தில் வேளாண் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (செப்.13) தமிழக உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார்.

தஞ்சாவூா் மாவட்டம், அணைக்கரையில் கீழணை அமைந்துள்ளது. இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கில பொறியாளர் சர் ஆதார் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தெற்கு வடக்கு கொள்ளிட பிரிவுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஷட்டருடன் கூடிய 80 மதகுகள் உள்ளது. இந்த அணைக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கல்லணையில் தேக்கப்பட்டு, ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் அனுப்பப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடி, அதாவது 150.13 மில்லியன் கன அடியாகும்.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் வடவாறு, வீராணம் ஏரி, வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால் என பல்வேறு வாய்க்கால்கள் வாயிலாக பாசனத்துக்கு செல்கிறது. இதன் மூலம் கடலூா் மாவட்டத்தில் 92,854 ஏக்கரும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,294 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கா் விளைநிலங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீீரை திறந்து வைத்த வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்.வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீீரை திறந்து வைத்த வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்.  ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் சம்பா சாகுபடியின் போது விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவா். சில பகுதிகளில் நாற்றங்கால் தயாா் செய்யும் பணி நடைபெறும். இதன் காரணமாக கீழணைலிருந்து தண்ணீா் திறப்பது சற்று தாமதம் ஆகும். தற்போது, கீழணையில் புதன்கிழமை நிலவரப்படி அதன் முழு கொள்ளளவான 9 அடியில் 8.50 அடி நீரும், வீராணம் ஏரியில் முழு கொள்ளளவான 47.50 அடியில் 43.95 அடி நீரும் தேக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு பாசனத்துக்காக தண்ணீரை வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 8 மணிக்கு கீழணையிலிருந்தும், 9.30 மணிக்கு வீராணம் ஏரியில் இருந்தும் வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து