முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்: 24 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுபான ஓட்டுப்பதிவு: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      இந்தியா
Vote 2024-01-05

ஜம்மு, பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 23.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். கடுமையான குளிர் நிலவி வரும் சூழலிலும் எவ்வித சர்ச்சையும், பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, கிஷ்த்வாரில் 56.86%, தோடாவில் 50.81%, ராம்பனில் 49.68%, சோபியானில் 38.72%, குல்ஹாமில் 39.91%, ஆனந்த்நாக்கில் 37.90% மற்றும் புல்வாமாவில் 29.84% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெறுவதாக மாநில தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரி பி.கே.போல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் வாக்களிக்க வரும் ஆர்வத்தைப் பார்க்கும் போது அதிக அளவில் வாக்குப்பதிவாகும் என்று தோன்றுகிறது. 60 சதவீதம் வாக்குகள் பதிவாகலாம் என எதிர்பார்க்கிறோம். வாக்குப்பதிவு சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முதல்கட்ட தேர்தலில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் 35,500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 16 தொகுதிகளில் வாக்களித்தனர். இவர்களுக்காக ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து