முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      விளையாட்டு
India-Bangladesh 2024-03-18

Source: provided

சென்னை : சென்னை, சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சுற்றுப்பயணம்... 

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிக்கெட் விற்பனை... 

இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும் அன்றைக்கு காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.200, ரூ.400 ,ரூ.1000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

கூடுதல் நெருக்கடி...

இந்நிலையில் வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது, இந்திய தொடரை எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. இதனால் எங்கள் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்பு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். ஆனால் நெருக்கடியை கவுரவமாக கருதுகிறோம். இது எங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும் என்றார்.

2021ம் ஆண்டு... 

சேப்பாக்கத்தில் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்காக டிக்கெட் விலை 200 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் டிக்கெட் 200,400,1000 ரூபாயாகவும், ஐந்து நாள் டிக்கெட் 1000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாள் டிக்கெட் கவுண்டரிலும், சீசன் டிக்கெட் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கவுதம் காம்பீர்...

கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக பொருப்பேற்ற பிறகு நடைபெறக்கூடிய முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வெற்றியோடு கணக்கை தொடங்க இந்திய அணி காத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பந்தயத்தில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது அந்த இடத்தை தக்கவைக்க இந்த தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மைதானத்தில் வாஷ் அவுட் செய்து இந்தியா வந்துள்ள வங்கதேச அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4வது இடத்திலிருந்து முன்னேறுவதற்காக போராடவுள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடாத விராட் கோலி 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார். அத்துடன் கார் விபத்தில் சிக்கி அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் களமிறங்கவுள்ளார். அத்துடன் ரோஹித், கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்க பூமி என்பதால் தமிழ்நாடு வீரர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்த காத்திருக்கின்றனர்.

வெற்றி கட்டாயத்தில்...

வங்கதேசம் அணியை பொருத்தவரை இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாததால் இம்முறை எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. நஜ்முல் தலைமையிலான வங்கதேசத்தில் சஹிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஸ்தபிஷூர் ரஹிம் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். இதே போல் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான மைடி ஹசன், டஜூல் இஸ்லாம் ஆகியோர் அசத்த காத்திருக்கின்றர். டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது இதில் இந்தியா 11 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இரண்டு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

ஆடுகளம் ஒரு பார்வை

சென்னை சேப்பாக்கத்தில் செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். கருமைநிற ஆடுகளம் தான் சுழலுக்கு நன்கு கைகொடுக்கும். ஆனால் சென்னையில் கடுமையான வெப்ப நிலை காணப்படுவதால் ஆடுகளம் சீக்கிரமாக சிதைவதற்கு வாய்ப்பு உண்டு. அவ்வாறான சூழலில் சுழற்பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து