முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார் இ.பி.எஸ்.

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      தமிழகம்
EPS-1-2025-07-31

ராமநாதபுரம்,  ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ராமநாதபுரத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எல்லை தாண்டி மீன்பிடித்தாக படகுகளை பறிமுதல் செய்து, மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அமைச்சர்களிடம் பேசி தீர்வு காண்பதற்கான முயற்சிகளை செய்வேன்.

விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடக்க வேளாண்மை வழங்கப்பட்ட பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சியான ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.540 கோடி காப்பீடு தொகை அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டன.

ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் காவேரி - குண்டாறு திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொண்டோம். ஆனால்  தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். தற்போது மேட்டூர் அணை நிரம்பி 1 லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக கடலில் வீணாக போய் கலக்கின்றது.

16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த  தி.மு.க. அரசு, கச்சத்தீவு இல்லாத காரணத்தினால் தமிழக மீனவர்கள் பாதிக்கின்றார்கள் என்று தெரிந்திருந்தும், கச்சத்தீவை மீட்பதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. கச்சத்தீவை மீட்க அ.தி.மு.க. சார்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து