முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது நீண்டகால இந்திய பிரதமர்: மோடிக்கு அமீரக அதிபர் வாழ்த்து

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      உலகம்
Modi 2024-12-04

Source: provided

அபுதாபி: இந்திய பிரதமர் மோடிக்கு அமீரக அதிபர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வரலாற்றில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். அதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது 11 ஆண்டுகளை கடந்து இந்தியாவின் 2-வது நீண்டகால பொறுப்பில் உள்ள பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். இதில் அமீரகம்-இந்தியா இடையிலான விரிவான கூட்டு முயற்சிகள் குறித்து பேசப்பட்டது. அதேபோல் நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சி மற்றும் பரஸ்பர இருதரப்பு மக்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்க கூடிய அனைத்து வாய்ப்புகளிலும் ஒத்துழைப்பு பெறுவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்திய வரலாற்றில் 2-வது நீண்டகாலம் பணியாற்றும் பிரதமராக பெருமை சேர்த்த மோடிக்கு அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வாழ்த்து தெரிவித்தார். இதில் அவர் இதேபோல வரும் காலத்திலும் இந்திய மக்களுக்கு சேவை புரிவதில் வெற்றியடைய வாழ்த்துவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து அமீரக அதிபரின் வாழ்த்துகளுக்கும், இந்தியா மற்றும் அதன் மக்களுக்கு அவர் வெளிப்படுத்திய அன்பான உணர்வுகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து