முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியீடு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      தமிழகம்
Surjith 2025-07-30

நெல்லை, என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்று சுர்ஜித்தின் சகோதரி  தெரிவித்துள்ளார்.

நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட வழக்கில், சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணனும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று கவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கவினின் தோழி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "கவினின் கொலையில் என் பெற்றோருக்கு தண்டனை கொடுப்பது தவறு. என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது. கவினுக்கும் எனக்குமான உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம். என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.

சுர்ஜித்தின் சகோதரி மேலும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம். கொஞ்சம் செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது.  கவினுக்கு போன் செய்த சுர்ஜித், 'பொண்ணு கேக்க வாங்க' என்று சொல்லியிருக்கிறான். 'எனக்கு திருமணம் முடிந்தால்தான் என்னுடைய தொழிலைப் பார்க்க முடியும்' என்று சொல்லியிருக்கிறான். அது எனக்குத் தெரியும். தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது,. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். விட்ருங்க அவ்வளவு தான்" என்று  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து