முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பொருளாதாரத்தை பா.ஜ.க. அழித்து விட்டது: ராகுல் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      இந்தியா
Rahul-gandhi-2025-07-31

புதுடெல்லி, அதானிக்கு உதவுவதற்காக பா.ஜ.க. அரசு இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் அமெரிக்காவின் பரஸ்பர வரி காலக்கெடு முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

டிரம்பின் இந்த அறிவிப்பு இந்திய தொழில் நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளதாகவும், இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.  இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சாடியுள்ளார். 

ராகுல் காந்தி கூறியதாவது:  இந்திய பொருளாதாரம் மோசம் அடைந்துவிட்டது. அதானி-மோடி கூட்டணி, பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி., தோல்வியடைந்த "அசெம்பிள் இன் இந்தியா", எம்.எஸ்.எம்.இ.க்கள் அழிப்பு, விவசாயிகள் நசுக்கப்படுதல் ஆகியவை இதற்கு காரணம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் எதிர்காலம் பாழாக்கப்பட்டுள்ளது"  என்று கூறியுள்ளார். 

இந்திய பொருளாதாரத்தை காலமான பொருளாதாரம் என்று டொனால்டு டிரம்ப் கூறியது பற்றி ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, சரியாகத்தான் கூறியிருக்கிறார். இந்திய பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்தை தவிர எல்லோருக்கும் இந்த உண்மை தெரியும். டிரம்ப் இந்த உண்மையை சொன்னதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதானிக்கு உதவுவதற்காக பா.ஜ.க. அரசு இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து