முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      தமிழகம்
Jail

Source: provided

திருநெல்வேலி: கொலையான கவின் செல்வகணேஷ், கொலை செய்ததாக சரணடைந்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர போலீஸார் அவரைக் கைது செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம், கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்​டது குறிப்பிடத்தக்கது.  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான சிறப்பு காவல் படை உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகிய இரு​வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின் உடலை வாங்கு​வோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் நெல்லை மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து