எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்திருந்த நிலையில், நேற்று இந்தியாவை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார் டிரம்ப்.
தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தளத்தில், டொனால்ட் டிரம்ப் இந்தியா - ரஷ்யா குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அதில், ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை. அவர்கள் தங்களது செத்தப் பொருளாதாரங்களை ஒன்றாக சேர்ந்து மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். அது பற்றி பரவாயில்லை.
வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை இந்தியா, ரஷ்யா மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். நாங்கள் இந்தியாவுடன் இணைந்து மிகக் குறைவான வணிகத்தையே மேற்கொள்கிறோம். அவர்களது கட்டணம் மிக அதிகம். இந்த உலகிலேயே, பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் கட்டணம் அதிகம். அதுபோல, ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து வணிகம் மேற்கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வணிக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாதது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில், அதிபரின் இந்த அறிவிப்பு புது டில்லி மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, அமெரிக்கா வைக்கும் வலியுறுத்தல்கள் அனைத்தையும் இந்தியாவை ஏற்க வைப்பதற்கான உக்தி இது, அண்மைக் காலமாக ஜப்பான், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இந்தியா மிகவும் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


