எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பதிவு செய்யாத தனியார் மகளிர் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வருகிற நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் பெண் ஊழியர்கள் தங்கும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015 ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் http://tnswp.com என்ற இணையதள பக்கம் மூலமாக பதிவு செய்யவேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்ய அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, போலீஸ் சரிபார்ப்பு சான்று, உணவு பாதுகாப்புத்துறையின் சான்றிதழ், தணிக்கை அறிக்கை மற்றும் சுகாதாரதுறைத்சான்று ஆகிய சான்றுகளுடன் http://tnswp.com என்ற இணையதளத்தில் நவம்பர் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுகுறித்த சந்தேகங்களுக்கு 91500 56800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முறையாக பதிவு செய்யப்படாத தனியர் விடுதி மற்றும் அதன் இணை நிர்வாகிகள் மீது சட்டப்படி போலீசில் வழக்குபதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


