முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      இந்தியா
Rahul 2024-09-09

Source: provided

புதுடெல்லி : ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீகாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், லுாப் லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது விபத்துக்குள்ளானது. 

ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தை போலவே, இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. லுாப் லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் 3 நாட்களாக நின்று கொண்டிருந்துள்ளது. இது குறித்து 3 நாட்களாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மைசூரு - தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசா பாலாசூர் பயங்கர விபத்தை பிரதிபலிக்கிறது. பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது. ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். 

பல விபத்துகளில் பல உயிர்கள் பலியாகியிருந்தாலும், மத்திய அரசு பாடம் கற்கவில்லை. இந்த அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும். இவ்வாறு அதில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து