முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழகம் இன்னிங்ஸ் வெற்றி

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      விளையாட்டு
14-Ram-53

Source: provided

கோவை: ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிராவை வீழ்த்தி தமிழகம் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

குரூப் டி பிரிவில்.... 

தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 100 ரன்னும், சாய் சுதர்சன் 82 ரன்னும் எடுத்தனர். நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் டி பிரிவில் கோவையில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தமிழகம் - சவுராஷ்டிரா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா தனது முதல் இன்னிங்சில் 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. சவுராஷ்டிரா தரப்பில் வாசவதா 62 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

367 ரன்கள் குவிப்பு...

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழகம் 367 ரன்கள் குவித்தது. தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 100 ரன்னும், சாய் சுதர்சன் 82 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 164 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணியினர், தமிழக வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி தனது 2வது இன்னிங்சில் 94 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து