முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      உலகம்
America 2024-11-02

வாஷிங்டன், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. 

பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் ஆகியவற்றுடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் வான் வழித் தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா அந்நாட்டுக்கு உதவிகளை செய்து வருகிறது. மேலும் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது படைகளை நிலைநிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.  இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் மத்திய கிழக்கு பகுதியில் பாதுப்பை மேலும் பலப்படுத்த கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவ உபகரணங்களை நிலைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

அதன்படி பாலிஸ்டிக் ஏவுகணைத் தற்காப்பு அழிப்பான்கள் மற்றும் நீண்ட தூர பி-52 குண்டு வீச்சு விமானங்கள், போர் படைப்பிரிவுகள், டேங்கர் விமானங்கள் ஆகியவை போர் கப்பலில் அனுப்பப்படுகிறது.இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை கூறும் போது, மத்திய கிழக்கில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் படைகளின் பாதுகாப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பில் எங்கள் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கும் வகையில், பாதுகாப்பு மந்திரி உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் ஆயுதங்கள் அனுப்பப்படுகிறது என்று தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து