Idhayam Matrimony

பொலிவியாவில் ராணுவதளம் மீது தாக்குதல் நடத்திய ஆயுத கும்பல்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      உலகம்
Bolivia 2024-11-03

Source: provided

லா பாஸ் : பொலிவியாவில் ராணுவ தளம் மீது ஆயுத கும்பல் நடத்திய தாக்குதலின் போது 20-க்கும் மேற்பட்ட வீரர்களை அந்த கும்பல் கடத்தி சென்றது. 

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு ஆயுத கும்பலுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கோச்சம்பா நகர் அருகே உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஆயுத கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது,  20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அவர்கள் கடத்தி சென்றனர்.

அப்போது, ராணுவ தளத்தில் இருந்து வெடிமருந்து மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதனால் கோச்சம்பா ராணுவ தளத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ஆயுத கும்பல் அறிவித்தது. இதற்கிடையே இந்த ஆயுத கும்பல் முன்னாள் அதிபர் ஈவோ மோரேலஸ் உடன் இணைந்து செயல்படுவதாக அதிபர் லூயிஸ் ஆர்ஸ் குற்றம்சாட்டி உள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து