முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபருக்குள் நடத்தி முடிக்கப்பட்ட 9 அரசு பல்கலை. பட்டமளிப்பு விழா : கவர்னர் மாளிகை பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      தமிழகம்
Rajbhavan

Source: provided

சென்னை : 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்டோபர் மாத இறுதிக்குள் நடத்தி முடித்துள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

பல்கலைக் கழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், கல்வித் திறனை மேம்படுத்துவதை உறுதிப்படுத்திடவும், அனைத்து பல்கலைகளிலும் பட்டமளிப்பு விழாவினை குறித்த நேரத்தில் கவர்னர் நடத்தினார்.

தமிழகத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் அக். 31-ம் தேதிக்குள் அனைத்து பல்கலைக் கழங்களிலும் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்திட அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார். 

அதனடிப்படையில் 3 பல்கலைகளில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கியதுடன், மேலும் 19 பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 8,27,990 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அனைத்து பல்கலைகளும் பட்டமளிப்பு விழாவினை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்ய துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

19 அரசுப் பல்கலைக் கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்டோபர் மாத இறுதிக்குள் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து