முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      தமிழகம்
Boot 2024 07 22

Source: provided

சென்னை :  துரைப்பாக்கம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

சென்னை அடுத்த தாழம்பூர், அண்ணா தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ஸ்ரீசுதன் (13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தவர் ஜஸ்வந்த் (12). நண்பர்களான 2 பேரும், பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களான 2 பேருடன் செம்மஞ்சேரியில் உள்ள வாழ்வெட்டி தாங்கல் குளத்தில் குளிப்பதற்காக கடந்த 1-ம் தேதி மாலை சென்றனர்.

அங்கு, நண்பர்களான 4 பேரும் குளத்தில் இறங்கி குளித்தபோது, நீச்சல் தெரியாததால் ஸ்ரீசுதன், ஜஸ்வந்த் ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட அவர்களது நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதும், மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 பேர், குளத்தில் குதித்து நீரில் மூழ்கி 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர், 2 சிறுவர்களையும் பரிசோதித்த போது, அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.

இது குறித்து வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 2 சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து