முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொபைல் போனில் வழிகாட்டுதல் சேவை வழங்க இஸ்ரோ திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      இந்தியா
ISRO 2023-07-13

Source: provided

புதுடெல்லி : செயற்கைக்கோள்களை ஏவி, பொதுமக்களின் மொபைல் போன் மூலம் வழிகாட்டுதல் சேவை வழங்க இஸ்ரோ  திட்டமிட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன் எப்போதும் இல்லாத புதிய சாதனைகளை இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம் நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உள்ளிட்ட திட்டங்களை இஸ்ரோ சிறப்பாக செய்தது. இதனால் இஸ்ரோவுக்கு மக்கள் மத்தியில் புகழ் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

இந்த சூழலில், 7 செயற்கைக் கோள்களை ஏவி, பொதுமக்களின் மொபைல் போனுக்கு நேவிகேஷன் எனப்படும் வழிகாட்டுதல் சேவை வழங்க இஸ்ரோ  திட்டமிட்டுள்ளது.

இது குறித்து விண்வெளித்துறையின் இன்ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா கூறியதாவது: 

எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பற்றிய தகவல் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், நேவிகேஷன் அமைப்பை உருவாக்க இஸ்ரோ பணியாற்றி வருகிறது. நாங்கள் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்த உள்ளோம். 

உலக அளவில் சிறு செயற்கைக்கோள் சந்தை 5.2 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. இதில் பெரும் பங்கை கைப்பற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, இஸ்ரோவின் சிறிய ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் விண்வெளி தளத்தில் இருந்து இந்த சிறிய ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக் கோள்கள் ஏவப்படும். விண்வெளித்துறையில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. 

அதோடு திறமைசாலிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே விண்வெளித்துறையில் முழுநேர பட்டப் படிப்பை கொண்டு வர பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இன்ஸ்பேஸ் மையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து