Idhayam Matrimony

சென்னையில் 9 விமானங்கள் திடீர் ரத்து: அவதிக்குள்ளான முன்பதிவு பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
Air-India 1

Source: provided

சென்னை : சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 4, புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ஆகிய 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

இதில் காலை 9.40 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு கவுகாத்திக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும் மற்றும் அதிகாலை 1 மணிக்கு புனே, காலை 9 மணி, மாலை 5.35 மணிக்கு பெங்களூரு, இரவு 8.20 மணிக்கு டெல்லி, இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களால், இந்த விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. விமானங்கள் திடீர் ரத்தால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். 

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, இதை போல் நிர்வாக காரணங்கள் என்று கூறி, பயணிகள் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்துள்ள விமான பயணிகள், தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் இன்று இயக்கப்படுகிறதா? என்று அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு விட்டு, அதன் பின்பு பயணம் செய்ய விமான நிலையம் வரவேண்டிய நிலை உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து