முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது அவரது மகன் போலீசில் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      சினிமா
Manoj-Mohan-Babu 2024-12-08

Source: provided

ஐதராபாத் : சொத்து தகராறு காரணமாக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவரது மகன் மஞ்சு மனோஜ். சமீபத்தில் நடிகர் மோகன் பாபு, தனது மகன் மனோஜ் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில்,  மனோஜ், தந்தை மோகன் பாபு மீது புகார் அளித்துள்ளார். காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று மனோஜ் புகார் அளித்திருக்கிறார். காயங்களுடன் சென்றதால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

சொத்து தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது முற்றி கைகலப்பான நிலையில், மனோஜ் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறுவதால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து