எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: அணைகளின் நீர் இருப்பை காண்காணிக்க வேண்டும். அணைகளில் இருந்து நீரினை திறந்து விடும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மேலும், கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று முன்தினம் அடைமழை வெளுத்து வாங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர்கள் உடன் நேற்று முன்தினம் (டிச.,13) முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்து தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிலையில், நேற்று (டிச.,14) முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும். அணைகளிலிருந்து நீரினை திறந்துவிடும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும். கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


