எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெல்போர்ன் : டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, நாதன் லயன் முந்தியுள்ளார்.
2 விக்கெட்டுகள்...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
538 விக்கெட்டுகள்...
இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் முந்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 537 விக்கெட்டுகள் எடுத்துள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முடிவில், நாதன் லயன் டெஸ்ட் போட்டிகளில் 538 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. அந்தப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


