Idhayam Matrimony

செம்மொழி பூங்காவில் 4-வது சென்னை மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      தமிழகம்
CM-1-2025-01-02

சென்னை, சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் வேளாண்மை - உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4-வது சென்னை மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

நேற்று தொடங்கிய மலர் கண்காட்சி ஜனவரி 18-ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர். மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டை tnhorticulture.in/spetickets என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். செம்மொழி பூங்காவில் நேரடியாகவும் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. 

அரிய வகை மரங்களும் உள்ளன. மலர் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 50 வகையான மலர்கள், 30 லட்சம் மலர் தொட்டிகள் இந்த மலர் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து