எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா காணொலி மூலம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது.
2024-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் சராசரியாக தரைக்காற்றின் வெப்பநிலை என்பது நீண்டகால சராசரியைவிட அதிகமாகப் பதிவானது. இது கடந்த 1901 - 2020 காலகட்டத்தில் பதிவானதை விட 0.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
இயல்பைவிட கூடுதலாக.. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 2025 ஜனவரியில் இயல்பைவிட கூடுதலாக வெப்பநிலை நிலவும் என்றும் வட மேற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் மத்திய பகுதிகள் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


