எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, சிலர் தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று ஆண்ட பரம்பரை பேச்சு குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் மதுரை அவனியாபுரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி சர்ச்சைக்குள்ளான பேச்சு குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "சிலர் தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள். நான் ஒரு அமைச்சர்; அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான நபர். அன்று நடந்த நிகழ்ச்சியில், நீங்கள் தற்போது பின்தங்கியிருக்கிறீர்கள். இப்போது படித்து முன்னேறி வருகிறீர்கள். அரசுப் பதவிக்கு வரும் நீங்கள் அனைத்து சமுதாய மக்களையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறினேன். அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
யாரோ வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்பியுள்ளனர். நான் ஆண்ட பரம்பரை என்று கூறியது, ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து ஆண்ட பரம்பரை என்று தான் குறிப்பிட்டேன். இது நேற்று (நேற்று முன்தினம்) நடந்தது இல்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்ததை யாரோ வேண்டுமென்றே இப்போது பரப்புகிறார்கள்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


