எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தோன்றி 5 ஆண்டுகளுக்கு பின் ஹெச்.எம்.பி.வி என்ற புதிய வைரஸ் தொற்று பரவல் காரணமாக அங்கு மருத்துவமனைகள், தகன மேடைகள் நிரம்பி வழிவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றி 5 ஆண்டுகளுக்கு பின் புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து 2019ம் ஆண்டு தோன்றிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோரை பலி கொண்டது. இந்த தொற்று பரவிய 5 ஆண்டுகளுக்கு பின் ஹெச்.எம்.பி.வி எனப்படும் மனித மெடப்னியுமோ வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகள் மற்றும் தகன மேடைகள் நிரம்பி வழிகின்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இன்புளூன்சா ஏ நிமோனியா மற்றும் கோவிட் 19 வைரஸ்களும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சீன அரசு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹெச்.எம்.பி.வி வைரஸ் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளையும் கோவிட் 19 நோய் அறிகுறிகளையும் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. குழந்தைகள் மருத்துவமனைகளில் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சீன நோய் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிமோனியா பரவலை கண்காணித்து வருவதாகவும் எங்கிருந்து அது தோன்றியது என ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


