எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை: அலங்காநல்லூர் - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகளை அமைக்க முகூர்த்தக்காலை நட்டு பணிகளை அமைச்சர் மூர்த்தி நேற்று துவக்கி வைத்தார்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
இந்த ஆண்டு முதல் போட்டி வரும் ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்தில் நடக்கிறது. இதனையடுத்து வரும் 15-ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.16ம் தேதி நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும் இடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா நேற்று நடந்தது. வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, முகூர்த்த கால் நட்டு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளரிடம் கூறுகையில், அலங்காநல்லூர் அருகே கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் தனியார் ஏற்பாடு செய்யும் ஜல்லிக்கட்டு அல்லது கிரிக்கெட் போன்றவற்றை நடத்தலாம். தற்போது மாமதுரை அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு, பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு வழக்கம்போலவே வீரர்களும், காளை உரிமையாளர்களும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பதிவாகும் எண்ணிக்கை அடிப்படையில், காளைகள் அவிழ்க்கப்படும். இதுகுறித்த அறிவிப்பை கலெக்டர் விரைவில் வெளியிடுவார் என்றார். இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.16ம் தேதி நடைபெறும் என்று விழாக்குழு அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


