எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அமலாக்கத்துறை சோதனை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும். இந்த சோதனைக்கு யார் வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. யாரும் வீட்டிலும் இல்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு சோதனை செய்ய வந்திருப்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள்கூட தெரியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தினர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்த செய்தியாளர்கள், அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்த சோதனை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும். இந்த சோதனைக்கு யார் வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
யாரும் வீட்டிலும் இல்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு சோதனை செய்ய வந்திருப்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள்கூட தெரியாது. எனவே பணியாளர்களுக்கு சரியாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. காட்பாடி சென்றபிறகுதான் சோதனை குறித்த விவரம் தெரியவரும்,” என்று அவர் கூறினார்.
மேலும், வரும் ஜன.6ம் தேதி, தமிழக சட்டமன்றம் கூடவுள்ளது. இதையொட்டி இந்த ஆண்டில் முதல்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்திருந்தார். அங்கு முதல்வரைச் சந்தித்து அமைச்சர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் துரைமுருகனும் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். அப்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனை குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


