எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சுல்தான்பூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூர் வழக்கில் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதை எதிர்த்து பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா, உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் விஜய் மிஸ்ராவிடம் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா குறுக்கு விசாரணை நடத்தினார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


