Idhayam Matrimony

ஆக்ராவில் பரபரப்பு: முகலாய மன்னர் அவுரங்கசீப் மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
Yogi 2023-12-30

Source: provided

புதுடெல்லி : உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் வசம் உள்ள மேலும் 25 கட்டிடங்களை இடிக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போதைய உ.பி.யின்  ஆக்ராவில் தாஜ்மகால்  உள்ளிட்ட 197 வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ளன.  இவை அனைத்தும் முகலாய மன்னர்களால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவற்றில், நான்கு வரலாற்று சின்னங்கள் கடந்த மூன்று மாதங்களில் இடிக்கப்பட்டு விட்டன. அதில், முக்கிய ஒன்றாக அவுரங்கசீப் கட்டிய முபாரக் மன்ஜில் எனும் மாளிகை உள்ளது. இதன் பெரும்பாலான பகுதி இடிக்கப்பட்டு விட்டது. இது ஆக்ராவின் யமுனை நதிக்கரையிலுள்ள பேலன்கன்ச் பகுதியில் உள்ளது. ஆங்கிலேயர்களால் நதிவழிப் போக்குவரத்துக்கான சுங்கவரி அலுவலகப் பயன்பாட்டில் இக்கட்டிடம் இருந்தது.

சுதந்திரத்துக்கு பின் தனியார் வசமான இக்கட்டிடத்தின் பகுதிகளை பிரித்து லாரி அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவற்றில் சிலவற்றை காலி செய்து இந்த இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சில நாள் முன்பாக, அக்கட்டிடத்தை உ.பி தொல்லியல் ஆய்வுத் துறையினர் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதன் மீது ஆட்சேபனைகளும் கேட்கப்பட்டிருந்தன.

எந்த ஆட்சேபனைகளும் வராத நிலையில், அதில் உ.பி தொல்லியல் சார்பில் இரண்டு தொல்லியல் ஆய்வாளர்களான ராஜீவ் ரஞ்சன், சுபாஷ் சந்திரா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு அடுத்தநாள் இக்கட்டிடம் இடிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. 

இதுகுறித்து பேலன்கஞ்ச்வாசியான கபில் வாஜ்பாய் செய்தியாளர்களிடம் கூறும்போது, இக்கட்டிடம் இடிக்கப்போவதாக நான் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. இந்த மாளிகையின் இடிபாடுகள் சுமார் 100 டிராக்டர்களில் ஏற்றி அகற்றப்பட்டன. இந்த இடிப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

இதற்கு முன் ஆக்ராவின் ஜொஹரா பாக்கிலுள்ள ஒரு கட்டிடம் தரைமட்டமானது. இக்கட்டிடமானது முகலாயர்களின் மூன்று அரசர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது. ஆக்ரா நெடுஞ்சாலையில் அமைந்த முகலாயர் கட்டிடத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டு விட்டன. இதுபோல், ஆக்ராவின் யமுனை நதிக்கரை முழுவதிலும் முகலாயர்கள் கட்டியப் பல கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மேலும் 25 கட்டிடங்களை இடிக்கவும் அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து