எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமெரிக்க : அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பரிசு பொருட்கள் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய வைரம் தான் தற்போது அதிக விலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கு, வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுப் பொருள்களிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ.17 லட்சம் மதிப்பிலான வைரம் தான் மிக விலைமதிப்புள்ள பரிசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவி பெற்ற பரிசுப் பொருள்களின் விவரங்களை அந்நாட்டின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில்தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 7.5 காரட் வைரம் தான், ஜில் பைடன் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில், உக்ரைன் தூதர் அளித்த ப்ரூச் எனப்படும் எந்த உடையிலும் அணிந்துகொள்ளும் 14,063 டாலர் மதிப்புள்ள நகை இடம்பிடித்துள்ளது. அடுத்து, எகிப்து நாட்டு அதிபரும், அவரது மனைவியும் இணைந்து ஜில் பைடனுக்கு அளித்த கைசெயின், ப்ரூச், மிகச் சிறப்பான புகைப்பட ஆல்பம் ஆகியவை 4510 டாலர் மதிப்புடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் அதிபர் ஜோ பைடன் பெற்ற பரிசுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தென் கொரியாவின் அதிபராக இருந்த சுக் யோல் யூன் அளித்த 7,100 டாலர் மதிப்புமிக்க புகைப்பட ஆல்பம், மங்கோலிய பிரதமர் அளித்த 3495 டாலர் மதிப்புள்ள மங்கோலிய போர் வீரர்களின் சிலைடி, புரூனே மன்னர் அளித்த 3,300 டாலர் மதிப்புள்ள வெள்ளிக் கிண்ணம் ஆகியவையும் முன்னிலை வகிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


