Idhayam Matrimony

சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்: இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய மத்திய அரசு

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      இந்தியா
china 2025-01-04

Source: provided

புதுடெல்லி: சீனாவில் புதிய வகை வைரஸ் பரவலை அடுத்து இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு. மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்து மத்திய அரசு , பொதுமக்கள் இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் அதை மறந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த புதிய வைரஸ் 'ஹியுமன் மெடா நியூமோ வைரஸ்' (எச்.எம்.பி.வி.) என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் சீனாவில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது என்றும், இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பால் சீனாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஏராளமான நோயாளிகள் குவிந்துள்ளதாகவும், உயிரிழப்பு அதிகரிப்பு காரணமாக மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியுள்ளன.

இந்தியாவில் இந்த வைரஸ் பரவி உள்ளதா என்பது குறித்து மத்திய சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் அதுல் கோயல் கூறியதாவது:- 'ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ்' (ஹெச்எம்பிவி) என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற வைரஸ் போன்றதே. இது, இளம்வயதினர் மற்றும் முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும். 

சீனாவில் ஹெச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தியாவில் சுவாசத் தொற்றுகள் மற்றும் பருவகால புளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாத தரவுகளின்படி, இப்பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு இல்லை. தற்போதைய சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை. 

பொதுவாக குளிர்காலங்களில் சுவாசத் தொற்று அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து