Idhayam Matrimony

காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து வீரர்கள் 4 பேர் பலி

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      இந்தியா
Army-camp 1

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் சதார் கூட் பயேன் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வந்துகொண்டு இருந்தபோது, குறுகிய வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தவுடன், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ நடந்த பகுதிக்கு விரைந்தனர். இதில் 4 வீரர்கள்  உயிரிழந்தனர். மீட்கப்பட்ட சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது.கடந்த டிச.24 ஆம் தேதி அன்று கூட பூஞ்ச் மாவட்டத்தில் ஹரோயோ பகுதியில் நடந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து