Idhayam Matrimony

கல்வி மட்டுமே பலம், தலைமை பண்பை கொடுக்கும்: கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
RN-Ravi 2025-01-05

Source: provided

சென்னை : கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், தலைமை பண்பை கொடுக்கும் என மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, விளிம்பு நிலையில் உள்ள சுமார் 5,000 மாணவர்களை, தனியார் கேளிக்கை பூங்காவிற்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்தது. இந்நிலையில் மாணவர்களின் இன்ப சுற்றுலாவை, ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய கவர்னர், கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், வலிமை மற்றும் தலைமை பண்பை கொடுக்கும் எனவும், மாணவர்கள் கடுமையாக முயன்று கல்வி பயில வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் வாழ்வில் நேர மேலாண்மையை நெறிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தை படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து