எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது.
ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு மங்களநாதர் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில் சாமி காப்பு கட்டுதல் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மங்களநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் உற்சவர் அன்னம், ரிசபம், மயில், பூதகணங்கள், பல்லக்கில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஜன.12 அன்று காலை 8 மணிக்கு மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனம் காப்புப் படி களைதல் மற்றும் 32 வகையான அபிஷேகங்கள், மூலிகை தைலம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஜன.13 அதிகாலை 3 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடுதல் மற்றும் பக்தர்கள் தரிசனம், அன்று மாலை மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தல், கூத்தர் பெருமான் வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


