Idhayam Matrimony

கடலில் 150 கி.மீட்டர் நீந்தி சாதனை படைத்த பெண்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      இந்தியா
Sharmila 2025-01-05

Source: provided

திருப்பதி : அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தி, கடலில் 150 கிலோமீட்டர் நீந்தி பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார் .

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சமல் கோட்டை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 52). நீச்சல் வீராங்கனையான இவர் 3 நாட்களுக்கு முன் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் இருந்து காக்கிநாடா சூரிய பேட்டையில் உள்ள என்.டி.ஆர் கடற்கரை வரை 150 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்தார். கடலில் 150 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்த ஷர்மிளாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

இது குறித்து ஷர்மிளா கூறுகையில், ஏற்கனவே ராமசேது இலங்கை லட்சத்தீவு உள்ளிட்ட கடலில் நீந்தி இருப்பதாகவும்,  கடலில் நீந்தி செல்லும் போது ஜெல்லி மீன்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும், ராம் பள்ளியில் இருந்து ஆமைகள் தன்னை பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறினார். அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் நீந்தியதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து